INTERNATIONS என்னும் அமைப்பு வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில் வெளிநாட்டவர்கள் வாழும் நகரங்களை தரவரிசை படுத்தியதில் 50 நகரங்களைக் கொண்ட பட்டியலில் ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்பர்டுக்கு 49-வது இடம் கிடைத்துள்ளது. அதாவது மோசமான நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடம் கிடைத்திருப்பதாக கூறலாம். இந்நிலையில் ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒருவர் ப்ராங்பர்ட் நகர நிர்வாக சேவைகள் திருப்தியாக இல்லை என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஏராளமானோர் வீட்டு வாடகை மிக அதிகம் எனவும், பாதிக்கும் மேலானவர்கள் விலைவாசி மிகவும் அதிகம் எனவும் கூறியுள்ளனர். அதேபோல் ஆய்வில் பங்கேற்ற 55 சதவீதத்தினர் மற்ற நகரங்களை போலவே பிராங்க்பட்டிலும் நண்பர்கள் கிடைப்பது மிகவும் கடினம் என கூறியுள்ளனர்.