Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மருந்தகங்களில் இனி இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழக முழுவதும் மருந்து கடைகளில் பணியாற்றும் மருந்தாளர்களும் வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் 40 ஆயிரம் சில்லரை மருந்து கடைகள், மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்த மறுத்தகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளர்களுக்காக வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டை உள்ளது.

மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள் மற்றும் மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளர்களும் பெரும்பாலானோர் தங்களுக்கான ஆடையை அணிந்து பணியாற்றுவதில்லை. இந்நிலையில் அனைத்து மருந்தாளுனர்களும் வெந்நீர் அங்கி மற்றும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று தமிழக மருந்து கட்டுப்பாட்டை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இனி பணி நேரங்களில் இது கட்டாயம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |