மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிலி என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘நானும் ரவுடி தான் படத்தை 100 முறை பார்த்திருப்பேன். பார்த்துவிட்டு விஜய் சேதுபதி சாருக்கு போன் செய்தேன்.
சார். நான் உங்களின் பெரிய ரசிகை, ஏதாவது ஒரு படத்தில் உங்களுடன் நான் நடிக்க வேண்டும். நீங்கள் அழைத்தால் அதற்கான ஆடிஷனில் நான் கலந்து கொள்வேன் என்றேன். அவர் ‘அய்யோ’ என்று சொல்லி ஆச்சரியப்பட்டார் என கூறியுள்ளார்.