Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

“ரத்தசாட்சி” படம்…. டிரைலரை வெளியிட்ட நடிகர் ஹிப்ஹாப் ஆதி…. இணையத்தில் வைரல்….!!!!

ஜெய மோகனின் கதையை மையமாக கொண்டு “ரத்தசாட்சி” என்ற திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் போன்றவை படத்தின் தலைப்பை “ரத்தசாட்சி” என்று நவம்பர் 7ம் தேதி அறிவித்தது. பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்றுதான் “கைதிகள்”. இதனை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதே “ரத்தசாட்சி” படம். இந்த படத்தை ரஃபிக் இஸ்மாயில் இயக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.

அத்துடன் ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் மற்றும் மெட்ராஸ் சார்லஸ் போன்றோர் நடித்துள்ளனர். திருமதி அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளம் டிசம்பர் 9ம் தேதி வெளியிட இருக்கிறது. தற்போது “ரத்தசாட்சி” படத்தின் டிரைலரை நடிகர் ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டு உள்ளார்

Categories

Tech |