Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

எடப்பாடி ஐயா கொஞ்சம் எடை போடுங்க…. டி.ராஜேந்தர் கோரிக்கை …!!

வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது , திரைப்படங்களுக்கான டி.டிஎஸ் , தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம். கொரோனா வைரஸ் மக்களுக்கு அச்சுறுத்தல் என்பது போல எங்களுக்கு டி.டி.எஸ் அச்சுறுத்தல் எனவே மாண்புமிகு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறோம். நாங்கள் தமிழக அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. எதிர்த்து போராட தயாராக இல்லை. எங்களுடைய உணர்வை சொல்கிறோம்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கேளிக்கை வரி இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் இருக்கிறது. எடப்பாடி ஐயா  இதை எடை போட்டுப் பார்த்து, சட்டமன்ற கூட்டத்தொடரில் முடிவெடுங்கள்.  நான் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சொல்கின்றேன். தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வர் தமிழக புரட்சித் தலைவ எம்ஜிஆர் அவர்கள் திரையுலகில் இருந்து வந்தவர் , திரை உலகத்தை வாழ வைத்தவர்.

தமிழ்நாட்டின் திரைப்பட உலகத்தில் இருந்து வந்தவர்தான் மறைந்துவிட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த நீங்கள் திரை உலகத்தை வாழ வைக்க வேண்டும். நாங்களே ஒரு சுயமாக சிந்தித்து, ஒன்று கூடி ஆலோசித்து , ஆராய்ந்து , விவாதித்து இந்த முடிவை எடுத்து இருக்கின்றோம். தமிழ் திரையுலகம் இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக இன்றைக்கு செல்கிறது என்று தெரிவித்தார்.

Categories

Tech |