தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் புதிய படங்களை திரையிடாமல் இருக்க திட்டமிட்டுள்ளோம் என்று டி.ஆர் ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் கூறும்போது, திரைப்படங்களுக்கான டி.டிஎஸ் , தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம். கொரோனா வைரஸ் மக்களுக்கு அச்சுறுத்தல் என்பது போல எங்களுக்கு டி.டி.எஸ் அச்சுறுத்தல் என்று அவர் தெரிவித்தார்.