கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தன்னுடைய மனைவியோடு பன்வேலிலிருந்து( மும்பை) வடகரா நேத்ராவதி எக்ஸ்பிரஸில் 2015 ஆம் வருடம் பயணம் செய்த சபரிமலை சீசன் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. பயணத்தின் தொடக்கத்திலிருந்து ரயிலில் தண்ணீர் இல்லாததால் பெட்டிக்குள் இருந்து பயணிகள் கழிப்பறைக்கு பயன்படுத்த பாட்டில் தண்ணீரை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் ரயில் கழிப்பறையில் தண்ணீர் இல்லை என்று அவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு வந்தது. அப்போது பயணம் தொடங்கும் முன் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டதாக இந்திய ரயில்வேயின் வாதத்தை நிராகரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அந்த நபருக்கு இழப்பீடாக பத்தாயிரம் ரூபாய் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.