சென்ற சில நாட்களாகவே ஓபிஎஸ் அணி சார்பாக நடக்கும் எந்தவொரு கூட்டத்திலும் கோவை செல்வராஜ் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக அவருக்கு ஓபிஎஸ் உடனான கருத்து வேறுபாடு உறுதியாகி விட்டதாக கூறப்பட்டது. அத்துடன் ஓபிஎஸ் அணியில் இருந்து விரைவில் கோவை செல்வராஜ் விலகிவிடுவார் என்றும் கூறப்பட்டது.
இதனிடையில் ஓபிஎஸ் அணி சார்பாக கோவை மாவட்டத்தை 4ஆக பிரித்து புது மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இவற்றில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆக இருந்துவந்த கோவை செல்வராஜின் பதவியானது பறிக்கப்பட்டு வேறு நபருக்கு வழங்கப்பட்டது.
அதன்பின் அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் அணியில் இருந்து தான் விலகிவிட்டதாக கோவை செல்வராஜ் அறிவித்தார். இந்த நிலையில் கோவை செல்வராஜ் தி.மு.க-வில் இணைகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாளை காலை 10:30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க-வில் இணைத்துக்கொள்கிறார்.