மகரம் ராசி நண்பர்களே..! இன்று லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். நண்பர் மற்றும் உறவினர் மூலம் அன்பு, பாராட்டும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். லாபம் கூடும், பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று மன தைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாகவே நடந்து முடியும். எல்லா இடங்களிலும் உங்களுக்கு மரியாதையும், கவுரவமும் இருக்கும். எல்லாத் எல்லாத் தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும்.
நன்மை, தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் பயம் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்விக்காகவும் இவர்கள் கடுமையாக உழைப்பார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு எப்பொழுதும் ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஊதா நிறம்