சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா தியேட்டரில் நடைபெற இருக்கிறது. இந்த விழா டிசம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 150 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழ் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி யுத்த காண்டம், ஓ2, நட்சத்திரங்கள் நகர்கிறது, மாமனிதன், இறுதி பக்கம், கோட், பபூன், கசடதபற, கார்கி, இரவின் நிழல், பிகினி மற்றும் ஆதார் போன்ற திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் இதேப்போன்று இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வந்த திரைப்படங்களும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.