Categories
தேசிய செய்திகள்

ஸ்பீடாக வந்த கார்…. ரோட்டில் இழுத்து செல்லப்பட்ட ஸ்கூட்டர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

நொய்டாவில் உள்ள இ-ஸ்கொயர் எனும் பிரபலமான ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தவர் தீபிகா திர்பதி (24). இவர் சென்ற ஞாயிற்றுகிழமை தான் பணிபுரிந்து வரும் ஓட்டலுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இதையடுத்து ஓட்டல் அருகில் வந்தபோது சாலையில் மற்றொரு இடத்தில் இருந்து ஸ்பீடாக வந்த சொகுசு கார் ஒன்று தீபிகாவின் வாகனம் மீது மோதி விட்டது.

இதனால் தீபிகா ஸ்கூட்டருடன் சாலையில் சில மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்டு பிறகு தூக்கிவீசப்பட்டார். இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த தீபிகாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் தீபிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்த்துறையினர் அந்த காரை ஓட்டிவந்த அரியானாவை சேர்ந்த சாமுவேல் ஆண்டிரு பைஸ்டர் என்ற நபரை கைது செய்தனர். கைதான நபர் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் என்ற பிரபல நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |