சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சிலரது செயல்களால் உங்கள் மனதில் வருத்தம் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்வீர்கள். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். எதிர்பார்த்துக்கொண்டிருந்த பணவரவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். மனநிம்மதி கொஞ்சம் குறையக்கூடும். வீண் பிரச்சினைகளில் கொஞ்சம் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே எதிலும் கவனமாக ஈடுபடுவது நல்லது.
இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் உங்களுக்கு ஓரளவு கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்துதான் செய்யவேண்டியிருக்கும். முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முக்கியமான காரியங்களில் ஈடுபடுவது, ரொம்ப நல்லது. இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க கூடிய சூழல் இருக்கும். இருந்தாலும் தேர்வில் மதிப்பெண்கள் எடுப்பதற்கான சூழல் இருக்கும். கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
இன்று முக்கியமான பணி நீங்கள் செய்யும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்