Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…வாக்குறுதிகள் கொடுக்காதீர்கள்.. பிரச்சனைகள் சரியாகும்..!!

 ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எவருக்கும் தேவையற்ற வாக்குறுதிகளை மட்டும் தர வேண்டாம். தொழில் வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கிய சேமிப்புக்காக செயல்படுவீர்கள். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன்-மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும்.

இன்று நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று மாணவச் செல்வங்கள் முயற்சியின் பேரில் தான் பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடத்தை கண்டிப்பாக எழுதிப் பார்க்க வேண்டும்.இது  மனதில் வைத்துக் கொள்வதற்கு உதவும். தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் முயற்சிகள் செய்து பாடங்களைப் படியுங்கள். தயவுசெய்து விளையாட்டை ஓரங்கட்டி விடுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |