சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்கள் இயக்க, ரூ.1620 கோடி மதிப்பில் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்ட்டுள்ளது. ஹிட்டாச்சி ரயில், எஸ்.பி.ஏ மற்றும் ம்ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் இந்தியா நிறுவனங்களுடன் சிக்னல், ரயில் இயக்க கட்டுமான பணிக்கு சென்னை மெட்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது. குறைந்தபட்ச இடைவெளியான 1 நிமிடம் 30 நொடிகளில் ரயில்களை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.