Categories
மாநில செய்திகள்

“இனி அச்சமில்லை”… சென்னை அண்ணா நகரில் பள்ளிக்கருகே புதிய நடை மேம்பாலம்….. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!!!

சென்னை அண்ணாநகர் ஜங்ஷனில் உள்ள உள்வட்ட சாலையானது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இது கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வடசென்னை ஆகியவற்றை இணைக்கும் சாலையாக இருப்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பகுதியில் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியும் அமைந்துள்ளது. அதன் பிறகு பெற்றோர் மற்றும் மாணவர்கள் சாலையை கடந்து செல்வதற்கு ஏதுவாக காலை மாற்றும் மாலை என இரு வேலைகளிலும் 40 நிமிடங்கள் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டீல் கேட் கதவு திறக்கப்படும்.

இந்த கேட் மற்ற நேரங்களில் மூடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கேட்டை குதித்து செல்ல வேண்டி இருக்கிறது. அதன் பிறகு இப்பகுதியில் வரும் வாகனங்கள் 80 கிலோமீட்டர் வேகத்தில் வருவதால் பள்ளியின் அருகே மாதந்தோறும் 5 விபத்துகள் நடப்பதாகவும், அதில் 2 பேர் உயிரிழந்து விடுவதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பாதசாரிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் தமிழக அரசுக்கு தொடர்ந்து விபத்தை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.

இதன் காரணமாக தற்போது நெடுஞ்சாலை துறை அந்தப் பகுதியில் எஸ்கலேட்டர் மற்றும் ஒரு  லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் ஒன்றை அமைக்க இருக்கிறது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், திட்ட மதிப்பு 1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை ஒரு வருட காலத்திற்குள் கட்டி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த அறிவிப்பு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |