Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (11.3.2020) நாள் எப்படி இருக்கும்.?ராசிபலன் இதோ…!!

இன்றைய  பஞ்சாங்கம்

11-03.2020, மாசி 28, புதன்கிழமை,

பிரதம திதி பகல் 03.34 வரை பின்பு தேய்பிறை துதியை

அஸ்தம் நட்சத்திரம் மாலை 06.59 வரை பின்பு சித்திரை.

மரணயோகம் மாலை 06.59 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2. ஜீவன் – 1.

சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00, 05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

இன்றைய ராசிப்பலன் – 11.03.2020

மேஷம்

இன்று உங்கள் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். நீங்கள் எதிர்பார்த்த லாபமும் உங்கள் கையில் கிடைக்கும். சிலருக்கு புதிதாக வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாக கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்பட கூடும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி  மகிழ்ச்சி ஏற்படும்.

ரிஷபம்

இன்று வியாபார தொடர்பாக பொருளாதாரத்தில்  நெருக்கடி போன்றவைஏற்பட கூடும், பார்த்து கொள்ளுங்கள். உங்களுக்கு கடன் பிரச்சனையால் கொஞ்சம் மன அமைதி இல்லாமல்போகும.. பிள்ளைகளின் வழியில் அனுகூலம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்காத உதவிகள் திடீர் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள்.

மிதுனம்

இன்று நிதானமாகவே இருங்கள். உங்கள் உறவினர்களுடன் தேவையில்லாத  வாக்குவாதங்கள் ஏற்படும். வரவிற்கு அதிகமாகவே செலவுகள் உண்டாகும்.  உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகமாகும். குடும்பத்தில் உங்கள் மனைவி வழியில்  நல்லது உண்டாகும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கடன்கள் குறையும்.

கடகம்

இன்று  பணவரவு அதிகமாகவே உங்கள் கையில் வந்து சேரும்.  நீண்ட நாட்களாக இருந்து வந்தபழைய பாக்கிகள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் திடீர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.  வெளிவட்டாரதில்  நட்பு உண்டாகும். உடல் நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம்

இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருககும்.

கன்னி

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேரும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வர்கள்.

துலாம்

இன்று குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மன சங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்பு மையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். வராத வெளிகடன்கள் வசூலாகும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலங்கள் ண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.  எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன்கள் கட்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு மனஉளைச்சல் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுடன் வீண் மனஸ்தாபங்ள் தோன்றும். தேவையற்ற செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் பொறுமையுடனும், சிக்கனமுடனும் இருப்பது நல்லது. வியாபார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்ளை தவிர்க்கவும்.

மீனம்

இன்று காலையிலே இனிய செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். சிலருக்கு கல்வி சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடபெறும்.

Categories

Tech |