தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு உதவி தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் பட்டதாரி யாரும் இருக்கக் கூடாது.
இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 6 ஆம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் கற்பிப்பு கட்டணம் வருடத்திற்கு 200 ரூபாய் என்ற அளவிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு 250 ரூபாய் என்ற அளவில் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இணைவதற்கு http://escholarship.tn.gov.in/scholarship.html என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.