Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

சச்சின் 0 , சேவாக் 3 , யுவராஜ் 1… சொதப்பிய முன்னணி வீரர்கள் ….!!

 இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி  மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட் மற்றும் தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் மோதின. முதலில் பேட் செய்த ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து. அதிகபட்சமாக தில்ஷான் , கபுகேதரா தலா 23 ரன்கள் எடுத்தனர்.

 

இந்திய அணி சார்பில் பட்டேல் 4  விக்கெட் வீழ்த்தினர். பின்னர் ஆடிய இந்திய லெஜெண்ட் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் கைப் 46 ரன்னும் , பதான் 57 ரன்னும் அடித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் , சேவாக் , யுவராஜ் சொதப்பி ரசிகர்களை ஏமாற்றினர்.

 

வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்டுடன் மோதிய முதல் போட்டியில் சச்சின் 29 பந்தில் 36 ரன் அடித்து அசத்த , சேவாக் 57 பந்தில் 74* ரன்னுடனும் , யுவராஜ் 7 பந்தில் 10* ரன்னுடனும் களத்தில் நின்று அசத்தினர். அதே போல இந்த போட்டியிலும் அடிப்பார்கள் என்று எதிர்பாரத்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. 5 பந்துகளை சந்தித்த சேவாக் 3 ரன்னிலும் , 2 பந்தை சந்தித்த சச்சின் 0 ரன்னிலும் , 3 பந்தை சந்தித்த யுவராஜ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Categories

Tech |