Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம்…. கார்டை போட்டால் கை நிறைய தங்கம்…. இனி தங்க பிரியர்களுக்கு செம ஜாலிதான்….!!!!!

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் பகுதியில் புதிதாக தங்க ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம்-ஐ கோல்ட்சிக்கா நிறுவனம் அமைத்துள்ளது. இது தங்க ஏடிஎம் வழியாக பொதுமக்கள் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம். நாம் சாதாரண ஏடிஎம்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துவது போன்றே தங்க ஏடிஎம்களிலும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி தங்க நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த தங்க ஏடிஎம் ஆனது தங்க உலகில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வரப் போகிறது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

அதன்பிறகு தங்க ஏடிஎம்மில் உள்ள நாணயங்கள் அனைத்தும் 999 தரச் சான்றிதழ் பெற்ற 24 கேரட் தங்கமாகும். இந்த ஏடிஎம் இல் மொத்தம் 3 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கம் வரை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், opencube technology’s நிறுவனம் இந்த ஏடிஎம் மிஷினை வடிவமைத்துள்ளது. இந்நிலையில் தங்க ஏடிஎம் முதலில் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து பல இடங்களிலும் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் தங்க பிரியர்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த ஏடிஎம் ஒரு வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |