Categories
மாநில செய்திகள்

ஆதார் எண்ணை இணைக்க புதிய லிங்க்…. தமிழக அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை  இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அப்டேட் செய்யப்பட்ட புதிய லிங்க் வெளியிடப்பட்டுள்ளதாக TANGEDCO அறிவித்துள்ளது. https: //bit.ly/linkyouraadhar என்ற லிங்கில் ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவித்துள்ளது. ஆதார் இணைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதாக வந்த தகவலையடுத்து புதிதாக மேம்படுத்தப்பட்ட லிங்க் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |