தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி வெளியான சர்தார் திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடிக்க, ராசி கண்ணா, ரெஜிசா விஜயன், லைலா உள்ளிட்டா பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பி.எஸ் மித்ரன் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் ஜி.வி பிரகாஷ் இசையில் வெளியான சர்தார் திரைப்படம் வெற்றி அடைந்ததால், தயாரிப்பாளர் இயக்குனர் மித்திரனுக்கு ஒரு காரை பரிசாக வழங்கியிருந்தார். இதனையடுத்து தற்போது படத்தில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் நடிகர் கார்த்தி வெள்ளி வாட்டர் பாட்டில் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெள்ளி வாட்டர் பாட்டிலின் விலை ரூபாய் 30000 என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.