Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரு தண்ணீர் பாட்டில் 250-க்கு விற்பனை… ஷாக்கான பக்தர்கள்..!!!

திருவண்ணாமலை மலை உச்சியில் தண்ணீர் பாட்டில் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காக ஏராளமான மக்கள் கரடு முரடான மலை பாதையை கடந்து உச்சிக்கு சென்று மகா தீபத்தை தரிசனம் செய்வார்கள். மலை உச்சிக்கு ஏறும் போது ஆக்சிஜனை சமன் செய்ய தண்ணீர் தேவை. தண்ணீர் குடித்தால் தான் களைப்பு நீங்கும்.

இதனால் பலர் தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்வார்கள். ஒரு சிலர் தண்ணீர் பாட்டிலை எடுத்து செய்வது சிரமமாக இருப்பதால் போதுமான அளவு மட்டும் கொண்டு செல்வார்கள். ஆனால் உச்சிக்குச் சென்ற பின்னர் தண்ணீர் காலியாகிவிடும். இதை பயன்படுத்தி சிலர் மலை உச்சியில் 20 ரூபாய் மதிப்புடைய தண்ணீர் பாட்டிலை 250 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பின் வேறு வழி இல்லாமல் அதிக விலை கொடுத்து தண்ணீர் பாட்டிலை வாங்கினார்கள்.

Categories

Tech |