மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் junior Hindi translator, junior translator , senior Hindi translator ஆகிய பதவிகளுக்கான பேப்பர் 2 தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பேப்பர் ஒன்று தேர்வு அக்டோபர் 1ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் அதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அடுத்த தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ssc.nic.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதற்கு முதலில் ssc.nic.in இணையதளத்தில் நுழைந்து SSC SR இணையதளத்தில் கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் JT,JHT,SHT நுழைவு சீட்டு லிங்கை கிளிக் செய்யவும்
- உங்களின் பதிவு ஐடி மற்றும் பிறந்த தேதி குறிப்பிட வேண்டும்
- SSC JHT ஹால் டிக்கெட் திரையில் தோன்றும் அதையே சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்