Categories
மாநில செய்திகள்

இனி விதி மீறினால்…. உடனே வாட்ஸ் அப் பண்ணுங்க…. வாகன ஓட்டிகள் தப்பிக்க முடியாது…!!!

போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வதால் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இவ்வாறு வேகமாக செல்வது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவரை பிடிக்க ரோந்து வாகனங்களில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

சிக்னலில் நிற்காமல் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து அவற்றைப் பிடிப்பதற்காக போக்குவரத்து காவல்துறையின் சார்பாக புதிய தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் வீதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை மக்களே இனி போட்டோவோ, வீடியோவோ எடுத்து 9003130103 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதன்மூலம், அந்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை விரைவில் தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |