Categories
தேசிய செய்திகள்

இனி சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்கு முன்பதிவு கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் இனி எந்த ஒரு பகுதியிலும் கேபில் மற்றும் குடிநீர் குழாய் பதிப்பு போன்ற பணிகளுக்காக பள்ளம் தோன்றினாள் “கால் பிபோர் யூ டிக்” என்ற செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலத்திற்கு கீழ் கேபிள், குழாய்கள் என பல்வேறு கட்டமைப்புகள் இருக்கின்றன. தொலைத்தொடர்பு சேவையின் கீழ் பல லட்சம் கேபிள்கள் செல்கின்றது. மின் கேபிள் மற்றும் குடிநீர் பதிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக சாலை மற்றும் சாலை ஓரங்களில் பள்ளங்கள் அவ்வபோது தோண்டப்பட்டு வருகின்றன.

அதனால் வருடத்திற்கு 3000 கோடி ரூபாய் மதிப்பிலான பத்து லட்சம் பைபர் நெட் கேபிள் துண்டிக்கப்படுகின்றது. அதனால் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்குவோருக்கு தேவையற்ற செலவு ஏற்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்களும் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இதனால் மத்திய தொலைத்தொடர்புத் துறை கால் பி போர் யு டிக் என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ள நிலையில் இனி நிலத்தில் பள்ளம் தோண்டுவதற்கு முன்பு இந்த செயலில் பதிவு செய்வது கட்டாயம் எனவும் எங்கு எதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது, யார் தோண்ட போகிறார், அவரின் தொடர்பு எண்கள் உட்பட அனைத்து தகவல்களையும் அதில் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |