தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு உள்ளது. இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.அதன் பிறகு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்த இன்று புயலாக வலுவடையும் எனவும் இதனால் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை அதனை ஒட்டியதற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என்பதால் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர்,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலால் மணிக்கு 60 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் தூத்துக்குடி, கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. மேலும் மீனவர்கள் தங்களின் படகு, இயந்திரம், வலை உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வைக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.