Categories
சினிமா தமிழ் சினிமா

பேயிடம் சிக்கிக்கொள்ளும் நயன்தாரா…. எப்படி தப்பிகின்றனர்?…. திகில் திரைப்படம்…..!!!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா “கனெக்ட்” என்ற பெயரில் தயாராகியுள்ள பேய் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா 15 வயதுள்ள பெண்ணிற்கு அம்மாவாக வருகிறார். மேலும் நயன்தாரா கணவராக வினய், தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து இருக்கின்றனர். இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.

இடைவேளை இன்றி ஓடக்கூடிய படமாக இது வருகிறது. இது தொடர்பாக டைரக்டர் அஸ்வின் சரவணன் கூறியதாவது ”கொரோனா ஊரடங்கு பேய் திரைப்படமாக இது தயாராகியுள்ளது. நயன்தாராவின் கணவரும், தந்தையும் வெளியே இருக்கும் போது ஊரடங்கு போடப்படுகிறது. இதன் காரணமாக நயன்தாராவும், அவரது மகளும் மட்டும் வீட்டில் முடங்குகின்றனர்.

அப்போது ஒரு பேயிடம் இரண்டு பேரும் சிக்கிக்கொள்கின்றனர். பின் வெளியில் உள்ளவர்களுடன் வீடியோ காலில் பேசி பிரச்சினையை கூறுகிறார்கள். பேயிடமிருந்து எப்படி தப்பிகின்றனர் என்பதுதான் கதை. இடைவேளை இன்றி 99 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக இது தயாராகியிருப்பது சிறப்பு அம்சம் ஆகும். 15 வயது பெண்ணுக்கு தாயாக நடிக்கவேண்டும் என்றதும் நயன்தாரா உடனே சம்மதித்தார்”என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |