Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை கல்யாணம் பண்ண ஆசையா?… அப்போ இதெல்லாம் பாலோவ் பண்ணனும்?…. கேத்தரின் தெரசா ஓபன் டாக்…!!!!

தமிழ் சினிமாவில் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் கேத்தரின் தெரசா ஆவார். இவர் தெலுங்கிலும் அதிகளவு படங்களில் நடித்து உள்ளார். தற்போது கேத்தரின் தெரசா பேட்டி அளித்தபோது “எனக்கு புத்தகங்கள் படிப்பது அதிகம் பிடிக்கும். எங்கு சென்றாலும் திருமணம் குறித்து அனைவரும் கேட்கின்றனர். இதற்கிடையில் எனக்கு கணவராக வர இருப்பவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும்.

அதாவது, அவர் என்னை போல புத்தகங்கள் படிக்க வேண்டும். என் உயரத்தை விடவும் கூடுதலாக இருக்க வேண்டும். அத்துடன் உடலை ஒரு கட்டுக்கோப்பாக வைத்து ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். என்னை போன்று உணவை விரும்பி சாப்பிடவேண்டும். இந்த லட்சணங்கள் இருப்பவர் தான் எனக்கு சரியான ஜோடி. அதுபோன்ற ஒருவர் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. சிறுவயது முதலே எனக்கு பில் கிளிண்டன் எனில் மிகவும் பிடிக்கும். ஆனால் ஏன் என்று தெரியாது” என்று அவர் பேசினார்.

Categories

Tech |