நடிகர் அஜித் உடன் “துணிவு” திரைப்படத்தில் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக இயக்குனர் ஹெச் வினோத் பேட்டியளித்துள்ளார். அதாவது, வலிமை பட ரிலீசுக்கு முன்பே துணிவு திரைப்படம் எடுப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் வலிமை திரைப்படத்துக்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் இப்படத்தில் புதியதாக எதுவும் சேர்க்கவில்லை என்று கூறினார்.
மேலும் ஹெச் வினோத் கூறியதாவது, அஜித் மற்றும் விஜய் குறித்து புதியதாக வரும் செய்திகளை உண்மையா இல்லையா என்று கூட பார்க்காமல் ரசிகர்கள் உடனே அதனை சமூகவலைத்தளங்களில் பரப்பி விடுகின்றனர். இதனால் இந்த 2 நடிகர்களுக்கும் படம் பண்ணும்போது நாம வடிவேலு மாதிரி தான் ஃபீல் பண்ணுவோம் என்று தெரிவித்தார்.