Categories
மாநில செய்திகள்

வேலைக்கு சென்ற மனைவிக்கு…. கணவரால் அரங்கேறிய கொடூரம்…. பட்டப்பகலில் பயங்கரம்….!!!!!

மதுபழக்கத்திற்கு அடிமையான கணவர், பிரிந்து பல வருடங்களாக தனியாக வசித்து வந்த மனைவியை மண் வெட்டியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 7 மணி அளவில் பைத்தானில் உள்ள நேருநகர் பகுதியில் அரேங்கேறியுள்ளது. இச்சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கணவரின் குடிப்பழக்கம், போதையில் அடித்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய காரணங்களால் இருவரும் சுமார் 2,3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையில் தன் மனைவி மீண்டும் தன்னுடன் இணைந்து வாழவேண்டும் என்று கணவர் அடிக்கடி வலியுறுத்தியுள்ளார்.

எனினும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தன் கணவருடன் வாழ அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில்தான் தன் மனைவி வேலைக்கு சென்றபோது, அவரை மண்வெட்டியால் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |