சென்னை முகலிவாக்கம் பள்ளியை 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் செல்வராஜ், இவர் தலைமையாசிரியருக்கு விடுப்பு வேண்டி லீவ் லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த மாணவன் எழுதியுள்ள விடுப்பு கடிதத்தில், ஐயா, “தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி, காய்ச்சல் அறிகுறி தெரிகிறது.
எனவே மற்ற மாணவர்களின் நலன் கருதி நான் நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாள்களை வருகை நாளாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த லீவ் லெட்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.