அஞ்சல் அலுவலகம் வாயிலாக வழங்கப்படும் கிசான் விகாஸ்பத்ரா திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் 10 வருடங்கள் மற்றும் 3 மாதங்களில் மொத்தம் 123 மாதங்களில் உங்களுக்கு இரட்டிப்பு தொகை கிடைக்கப் பெறும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூபாய்.1000 முதலீடு செய்து வருடந்தோறும் 7 % சம்பாதிக்கலாம்.
இதனிடையில் அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை மற்றும் ஆண்டுதோறும் தொகை அதிகரிக்கப்படுகிறது. அவசரத் தேவைகளுக்காக பணம் பெற நினைப்பவர்கள் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களுக்குப் பின் இந்த கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். 18 வயதுக்கு அதிகமான அனைவரும் இத்திட்டத்தில் பங்களிக்கலாம்.
18 வயதுக்கு குறைவானவர்கள் கூட்டுக்கணக்கை திறக்கலாம். இந்த திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை ஆன்லைனில் பெறலாம் (அ) உள்ளூர் தபால் நிலைய கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். மத்திய அரசு 3வது காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டத்தின் விகிதத்தை 0.30 % உயர்த்தியது. இத்திட்டத்துக்கான வட்டிவிகிதம் 0.10% அதிகரிக்கப்பட்டுள்ளது.