தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.
இந்நிலையில் 770 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் இருந்து15 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் Mandous புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலாக வலுப்பெற்ற நாளை காலை வட தமிழகம் ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்பதால் தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.