நடப்பு ஆண்டு உலகளவில் கூகுளில் அதிகளவு தேடப்பட்ட சொற்றொடர்களில் முதலிடம் பெற்றிருக்கும் 10 வார்த்தைகளை அந்நிறுவனமானது வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்து உள்ளது. இது இணைய வார்த்தை விளையாட்டு ஆகும். அதிகமான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடி உள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக இந்தியா -இங்கிலாந்து (India vs England) சொல் இருக்கிறது. உக்ரைன் எனும் சொல் 3-வது இடம் பிடித்து உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ராணி எலிசபெத், 5வது இடத்தில் இந்தியா -தென்னாப்பிரிக்கா, 6வது இடத்தில் உலகக்கோப்பை, 7வது இடத்தில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள், 8வது இடத்தில் ஐ-போன் 14, 9வது இடத்தில் அமெரிக்க சீரியல் கில்லரான ஜெஃப்ரெ தாமெர், 10வது இடத்தில் இந்தியன் பிரீமியர் லீக் சொல் அதிகம் தேடப்பட்டுள்ளது. கூகுளில் நடப்பு ஆண்டில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் விளையாட்டு குறித்த சொற்களே அதிகம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.