Telegram செயலியில் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அடிப்படையில் பல வகையான சிறப்பம்சங்கள் இருக்கிறது. அதுமட்டுமின்றி பயனாளர்களுக்கு அட்டகாசமான அப்டேட்டுகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது நீங்கள் Telegram செயலியில் பதிவுசெய்ய உங்களின் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை.
எனினும் நீங்கள் சிம்கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானது ஆகும். அதனை தொடர்ந்து பயனாளர்கள் தங்களது எண்ணை யார் பார்க்க வேண்டும் என்பதை நிர்வகிக்கும் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்பின் பயனாளர்கள் பிறருக்கு அனுப்பும் செய்திகளையும் மற்றும் பிறரிடமிருந்து பெறும் செய்திகளையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் நீக்குவதற்கான அம்சங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
இதை மேற்கொள்ள Settingsல் Privacy & Security என்பதற்குள் Auto-Delete Messages என்பதை கிளிக்செய்ய வேண்டும். இவற்றில் நீங்கள் விரும்பும் நேரத்தையும் உள்ளிடலாம். அத்துடன் இந்த செயலியில் பேசுவதை எழுத்துக்களாக மாற்றும் வசதியும் ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.