ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி (Ashraf Ghani) தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். சிறையில் இருந்து விடுதலையாகும்போது தலிபான் கைதிகளை அழைத்துச் செல்லத் தயாராக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல பதிலுக்கு சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரம் ராணுவ வீரர்களை விடுவிக்க தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய அம்சமாகும்.
ஆப்கானிஸ்தானில் சிறைகளில் உள்ள 5,000 தலிபான்களில் 1,500 பேர் முதலில் விடுவிக்கப்படஇருக்கின்றனர். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மீதமுள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.