Categories
சினிமா தமிழ் சினிமா

முதலில் வாரிசு படத்தைத் தான் பார்ப்பேன்…. துணிவு பட இயக்குனர் வினோத் ஓபன் டாக்…!!!

இயக்குனர் வினோத் பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.

இத்திரைப்படத்தின் பிரமோஷனுக்காக இயக்குனர் வினோத் பல ஊடகங்களில் பேட்டி அளித்து வருகின்றார். அப்போது அவரிடம் முதலில் நீங்கள் துணிவு திரைப்படத்தை பார்ப்பீர்களா அல்லது வாரிசு திரைப்படத்தை பார்ப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் தெரிவித்ததாவது, நான் வாரிசு திரைப்படத்தை தான் பார்ப்பேன். படத்தின் இயக்குனராக துணிவு திரைப்படத்தை பலமுறை பார்த்துவிட்டேன். பார்க்காதது வாரிசு தான். ஆகையால் அதை தான் முதலில் பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |