NPR சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு தயங்கியதால் திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த NPR சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாலியுறுத்தின. இதற்க்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார், தேசிய மக்கள் தொகை பதிவேடு தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
NPR விவகாரம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் என்பதால் சட்டப்பேரவை தீர்மானம் அந்த விவகாரத்தை கட்டுப்படுத்தாது என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார். மக்கள் தொகை பதிவேடு தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு மறுப்பு தெரிவித்ததால் திமுக வெளிநடப்பு செய்தது.