2022 ஆம் வருடத்தின் மார்ச் மாதம், மத்திய அரசு தன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை(DA) 3 சதவீதம் அதிகரித்தது. அதன் வாயிலாக ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 34 % ஆக அதிகரித்து அவர்களின் அடிப்படை சம்பளத்தில் உயர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு அகவிலைப்படி(DA), அகவிலை நிவாரணம்(DR) மற்றும் பிட்மென்ட் காரணி போன்றவற்றில் திருத்தத்தை மேற்கொள்ளும் எனவும் மேலும் ஊழியர்களின் கணக்கில் 18 மாத நிலுவைத்தொகையை வழங்குவது பற்றி நல்ல முடிவை எடுக்கும் எனவும் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. அதன்படி 2023 ஆம் வருடத்தின் மார்ச் மாதத்தில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டும் 3 -5 % வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக ஊழியர்களுக்கு 2023 ஆம் வருடத்தின் ஜனவரி மாதத்தில் இருந்தே பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணவீக்கத்தை பொறுத்துதான் அகவிலைப்படியானது அதிகரிக்கப்படும். இதனிடையில் பணவீக்கம் 6% இருப்பதால் அதை பொறுத்து அகவிலைப்படி அதிகரிக்கப்படும். பிட்மென்ட் காரணி இப்போது 2.57 ஆக உள்ளது. இதை 6வது மத்திய ஊதியக்குழு 1.68 ஆக நிர்ணயித்தது. இப்போது பிட்மென்ட் காரணியை 3.68ஆக அதிகரிக்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். இது ரூபாய்.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர்த்து ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவையிலுள்ள அகவிலைப்படி பிரச்சினையும் தீர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.