குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 100 இடங்களை தாண்டி பாஜக முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. தபால் வாக்கு எண்ணிக்கைகளிள் தொடர்ந்து பாஜக முன்னிலை வகிக்க கூடிய நிலையில், தற்பொழுது பாஜக தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து அரை மணி நேரம் கூட ஆகாத நிலையில் தற்போது பாஜக 141 இடங்களில் முன்னிலை வகுக்கின்றது.
காங்கிரஸ் 28 இடங்களிலும், ஆம் ஆத்மி 8 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. குஜராத் தேர்தல் முடிவுகள் பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாடே எதிர்பார்க்கக் கூடிய இந்த தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.