உலகில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டாவது நபர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டாவது நபர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பெயர் ஆதம் கேஸ்டில்ஜோ (Adam Castillejo). 40 வயதான இவர் கடந்த 30 மாதங்களாக எந்தவித மருந்துகளும் இல்லாமல் நலமுடன் வாழ்ந்து வருவதாக மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) தெரிவித்துள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த நபருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட காலமாக அவர் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு குணமடைந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு கூடுதலாக எலும்பு மஜ்ஜை அறுவை மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கின்றார்.
முன்னதாக எச்.ஐ.வி நோயிலிருந்து குணப்படுத்தப்பட்ட முதல் ஜெர்மன் நபரான திமோதி பிரவுனுக்கு (Timothy Brown) 2007 ஆம் ஆண்டில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நலமுடன் இருக்கின்றார். அதே நேரத்தில், அனைத்து எச்.ஐ.வி நோயாளிகளுக்கும் இந்த மாற்று சிகிச்சை பலனளிக்காது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவ நிபுணர் ரவீந்திர குமார் குப்தா தெரிவித்துள்ளார்.