Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை கட்சி அறிவிப்பு…. தமிழருவி மணியனுடன் திடீர் ஆலோசனை ….!!

நடிகர் ரஜினிகாந்த் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றார்.

தமிழகத்தின் சிறந்த நடிகர்களில் ஒருவரான , சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக்கூடிய ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கான நடவடிக்கையை கடந்த 3 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். அரசியல் கட்சி தொடங்குவது உறுதியான நிலையில் இன்னும் சில தினங்களுக்குள் அறிவிப்பு வெளியாகுமென்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினி ரசிகர் மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசனைகளை வழங்கி கூடிய தமிழருவி மணியனுடன் அவரது இல்லத்தில் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கிளம்பி கோடம்பாக்கத்தில் இருக்க கூடிய ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குச் சென்று இருக்கின்றனர்.

Image result for tamilaruvi manian VS RAJINI

நாளை ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை ஈடுபட இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியும் , மாநாட்டு தேதிகளும் அறிவிக்கப்பட இருப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெறுள்ளது என்று சொல்லப்படுகின்றது.

Categories

Tech |