விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்..9 ஆம் தேதி பிக்பாஸ் பிரம்மாண்ட நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரங்களிலேயே ஜி.பி.முத்து வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அதன்பின் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிஷன் ஆகும். தற்போது அதற்கான ஓட்டிங் நடைபெற்று வருகிறது. தற்போது வரை வந்துள்ள ஓட்டிங் நிலவரப்படி ராம் மற்றும் ஆயிஷா கடைசி இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் 2 இரண்டு இடங்களில் அசீம் மற்றும் ஜனனி இருக்கின்றனர்.