Categories
தேசிய செய்திகள்

நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்… 33 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

கொலம்பியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவின் ரிசரால்டா மாகாணத்தில் பெரேரா- கிப்டோ என்ற மலைபாங்கான பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கடந்த 5-ம் தேதி வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு ஏற்பட்ட பயங்கர நிலச்சரவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவை மண்ணுக்குள் புதைந்தது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பல மணிநேர போராட்டத்திற்கு பின் 33 பேரை பிணமாக மீட்டுள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மேலும் சிலர்  நிலசரிவில் சிக்கி இருக்கலாம் எனவும் தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்  என அஞ்சப்படுகிறது.

Categories

Tech |