கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தள்ளிப்போன குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது.கிராம நிர்வாக அலுவலர் டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. சுமார் 7382 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்த நிலையில்18.5 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். கடந்த வருடங்களை விட இந்த வருடம் வினாத்தாள் சற்று கடினமாகவே இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இந்த வருடம் குறைவான காலிப்பணியிடங்கள் அதிகமானவர்கள் விண்ணப்பிக்க தேர்வு எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்வு நடந்து முடிந்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30% இடஒதுக்கீட்டை வழங்கும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இதனால், இந்த நடைமுறையை பின்பற்றி குரூப்-4 முடிவுகளை டிசம்பர் 3வது வாரத்தில் வெளியிட TNPSC திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.