Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்…? 155 பயணிகள் காயம்… பெரும் பரபரப்பு…!!!!!

ஸ்பெயினில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 155 பயணிகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தில்  மன்ரேசா ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை நோக்கி நேற்று காலை பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது எதிர்பாராத விதமாக இந்த ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்திற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |