தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக கனெக்ட் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இறைவன், ஜவான், நயன்தாரா 75 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். நயன்தாராவுக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து இருந்தவர் நடிகை அனிகா. இவர் இப்போது மலையாளத்தில் உருவாகிவரும் புது படத்தின் வாயிலாக கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளார்.
சமுகவலைதளத்தில் ஆக்டிவாக உள்ள நடிகை அனிகா அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்வார். அந்த அடிப்படையில் அனிகா லேட்டஸ்ட்டாக எடுத்த தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார். மேலும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல பேரும், நயன்தாராவையே மிஞ்சும் அளவிற்கு அனிகா போட்டோவில் அசத்துகிறாரே என கூறிவருகின்றனர்.