7 மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்டை சபாநாயகர் ஓம் பிர்லா திரும்ப பெற்றார்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் தொடர்ந்து டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து முதலில் விவாதம் தேவை என்று சொல்லி வந்தார்கள். ஆகவே அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை அனுமதிக்க முடியும் என்று கூறினார்கள். இதனால் மற்ற அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, கூச்சல் குழப்பம் இடையே ஒரு சில அலுவல்களை மட்டும் சபாநாயகர் நடத்திக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபத்துடன் சபாநாயகர் ஓம்பிர் லா இருக்கையை முற்றுகையிட்டு, சபாநாயகர் இருக்கையில் இருந்த ரமாதேவியின் கையில் வைத்திருந்த ஆவணத்தை கிழித்தெறிந்தார்கள். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக் தாகூர் , கவுர் கோகாய் , பிரதாபன் , தீன் சூரிய கோஸ், உண்ணிதன் உட்பட 7 மக்களவை உறுப்பினர்களை ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது 7 மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்டை திரும்ப பெற்றார் சபாநாயகர் ஓம்பிரலா சபாநாயகர் தனது முடிவை திரும்ப பெற்றதால் இனி 7 பேரும் மக்களவை தொடரில் கலந்து கொள்வார்கள். காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் இவர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெற்றுள்ளார்.