வருடந்தோறும் கூகுளில் அதிகம் தேடப்படும் திரைப்படங்கள், சொற்கள், கேள்விகள் என பல்வேறு துறை சார்ந்து தேடப்பட்ட பட்டியல் கூகுள் நிறுவனம் அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் வருடம் தமிழ் திரைப்படங்களில் அதிகம் தேடப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூகுளில் அதிகம் தேடப்படும் திரைப்படங்களாக விக்ரம் திரைப்படம் முதலிடத்தையும், பொன்னியின் செல்வன் 2-ம் இடத்திலும், அதனை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படம் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. இதனையடுத்து ராக்கெட்டரி திரைப்படம் 4-வது இடத்தையும், லவ் டுடே திரைப்படம் 5-வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய வலிமை 6-வது இடத்திலும், திருச்சிற்றம்பலம் 7-வது இடத்திலும் உள்ளது. இதனை தொடர்ந்து மகான் 8-வது இடத்திலும், கோப்ரா 9-வது இடத்திலும், விருமன் 10-வது இடத்திலும் உள்ளது.