நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு வேலையின்மை பிரச்சினையால் பலரும் தவித்து வருகின்றனர். இருப்பினும் அரசு சார்பாக வேலை வாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை அரசு வேலை வாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வரையிலான பதிவு தொடர்பான தரவுகளை வேலைவாய்ப்பகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் வேலை வாய்ப்பிற்காக 67 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதில் ஆண்கள் 31,50,007 பேரும், பெண்கள் 36,05,086 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 270 பேரும் உள்ளனர். மாற்று திறனாளிகளில் மொத்தம் 1,43,395 பேர் காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது 30.11.2022ன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.